விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சியான் விக்ரம் நடிப்பில் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இர்பான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, சர்ஜனோ காலித், பத்மப்ரியா, கனிஹா, மிர்னாலினி, மீனாட்சி கோவிந்தராஜன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்பத்தின் திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் வருவது போன்றும், ஹாலிவுட் படத்திற்கு இணையான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மொத்தம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இம்மாதம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
– இரா.நம்பிராஜன்








