“தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுப்படி திட்டத்தை உள்ளாட்சிகளுக்கும் விரிவுபடுத்திடுக” – மு.வீரபாண்டியன்

சென்னை மாநகராட்சிவழங்க உள்ளதை, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மைப் பணியாளர்களுக்கும் விரிவுபடுத்திட வேண்டும் என்று மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 24 ஆயிரத்து 264 தூய்மைப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த உணவிற்குப் பதிலாக, நாளொன்றுக்கு உணவுப்படியாக ரூ 50 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்காக 44 கோடியே 28 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தரமான, தங்களுக்குப் பிடித்த உணவை, தங்களுக்குத் தேவையான நேரத்தில் தூய்மைப் பணியாளர்கள் உண்ண முடியும். எனவே, இது வரவேற்பிற்குரியது.
இத்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சிகளுக்கும் விரிவு படுத்திட வேண்டும்.

இந்த உணவுப்படித் தொகையை ரூ 50 லிருந்து ரூ 100 ஆக உயர்த்தி வழங்குவதோடு, மருத்துவ விடுப்பு மற்றும் பேறுகால விடுப்பில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கும் வழங்கிட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தங்களன்புள்ள,

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.