பேருண்டுகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை தனியார் பேருந்துகளுக்கும் விரிவு படுத்த வேண்டும், அதற்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை ஒருநாள் தனியார் பேருந்துகள் இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர்கள சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து இருந்தன.
இந்த நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கேட்டு கொண்டதன் அடிப்படையில் தனியார் பேருந்து உரிமையாளர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குப்புசாமி தெரிவித்துள்ளார்.




