முக்கியச் செய்திகள் இந்தியா

வாரணாசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு விரைவு ரயில் – இணையமைச்சர் எல்.முருகன் கோரிக்கை

வாரணாசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு விரைவு ரயில் இயக்கக்கோரி மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சந்தித்தார். இந்த சந்திப்பில், தமிழ்நாட்டிற்கான ரயில்வே சார்ந்த திட்டங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பில் ஈரோடு- பழனி ரயிலை, தாராபுரம் வழியாக இயக்க கோரிக்கை விடுத்த எல்.முருகன், இதனால் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல், புண்ணிய தலங்களை இணைக்கும் வகையில் வாரணாசியில் இருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு விரைவு ரயிலை இயக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், திட்டங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கொற்கையில் 2000 ஆண்டுகள் பழமையான 7 அடுக்கு செங்கல் கட்டிடம் கண்டுபிடிப்பு

Jeba Arul Robinson

கோயில் வாசல்வரை மோகன்லால் காரை அனுமதிப்பதா? ஊழியர்கள் சஸ்பெண்ட்

Ezhilarasan

அரசு மருத்துவமனைகளை நவீனமயமாக்க நடவடிக்கை: ஊர்வசி அமிர்தராஜ்

Gayathri Venkatesan