முக்கியச் செய்திகள் இந்தியா

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பிரதமர் பாராட்டு

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து காணொலி மூலம், ஆசிரியர் வார விழாவை கொண்டாடும் ஷிக் ஷாக் பார்வ் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில், பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஆடியோ வடிவிலான புத்தகங்கள் உள்ளிட்ட கல்வித்துறையில் பல்வேறு முக்கிய அம்சங்களை மோடி வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்று தொடங்கப்பட்ட புதிய முயற்சிகள் எதிர்காலத்தில் கல்வித்துறையை கட்டமைக்கும் வகையில் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மாணவர்களை எதிர்கால கல்விமுறைக்கு தயார்படுத்தும் நோக்கில் புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கொரோனா தொற்று காரணமாக கல்வித்துறையில் பெரும் சவால்கள் ஏற்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, அனைத்து சவால்களையும் திறம்பட எதிர்கொண்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

கட்டுமானப் பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

Ezhilarasan

சேலம் ஆத்தூர் திமுக வேட்பாளர் மாற்றம்!

Jeba Arul Robinson

அமெரிக்க அதிபரின் உரை ஆசிரியரானார் இந்திய வம்சாவளி நபர்!

Jayapriya