அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சாக்லெட் தொழிற்சாலை வெடி விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வெஸ்ட் ரீடிங் பகுதியில் ஆர் எம் பால்மர் என்ற நிறுவனத்தின் சாக்லெட் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலை அதிகாலை நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த தொழிற்சாலையின் கட்டடம் முழுக்க இடிந்து விழுந்ததுடன் அந்த இடமே தீப்பற்றி எரிந்தது. மேலும் அருகாமையில் இருந்த மற்றொரு கட்டடத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வெடிவிபத்தில் சாக்லேட் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 8 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 9 பேர் மாயமாகி உள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.வெடிவிபத்தால் சாக்லேட் தொழிற்சாலை நிலைகுலைந்ததால் மாயமானோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால், மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தொழிற்சாலை வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது.