உணவு தேடி ஊருக்குள் புகுந்த காட்டெருமை; கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து ஊருக்குள் இரைத் தேடி வந்த காட்டெருமை கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள்…

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து ஊருக்குள் இரைத் தேடி வந்த காட்டெருமை கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம்
அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன.மான்,பன்றி,காட்டெருமை,மிளா உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் இரை தேடி ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.அவ்வாறு வரும் விலங்குகள் மின்வேலி,வண்டிகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில சமயங்களில் விவசாய நிலங்களில் புகுந்து நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் அய்யங்கரடு சென்னிக்குட்டை பகுதியில் இருந்து இரைத் தேடி ஊருக்குள் புகுந்த காட்டெருமை ஒன்று ஜெகன்குமார் என்வருடைய தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

காட்டெருமையின் அலறல் சத்தம் கேட்டு ஜெகன்குமார் உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.10 மணி நேரம் கழித்தே சம்பவ இடத்திற்கு வந்த காட்டெருமையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பல மணி நேரம் ஆனதால் தண்ணீரில் மூழ்கி காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.

பின்னர் காட்டெருமையின் உடல் மீட்கப்பட்டு கால்நடைத் துறையினர் பிரேத பரிசோதணைக்கு பின்னர் அடர்ந்த வனப்பகுதிகளில் காட்டெருமையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. எனவே வன எல்கைகளில் மின்வேலிகளை வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.