முக்கியச் செய்திகள் இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வெடி விபத்து- 3 பேர் காயம்

சபரிமலை கோயில் அருகே வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து நிரப்பும் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது. பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு வெகுவிமரிசையாக நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில், சபரிமலையில் வெடி வழிபாட்டுக்கான வெடிமருந்து நிரப்பும் மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாளிகைபுரம் அருகே வெடி வழிபாட்டுக்கான வெடி மருந்து நிரப்பும் மையம் உள்ளது. இந்த மையத்தில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து நடந்த இடத்தில் தீபரவாமல் தீயணைப்பு துறையினர் உடனடியாக தண்ணீர் பாய்ச்சி அணைத்தனர். இந்த விபத்தில் அங்கு பணியாற்றிய ராஜேஷ், அமல், ஜெயக்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு சன்னிதானத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்துள்ள 3 ஊழியர்களில் ஒருவருக்கு 60 சதவீதம் தீக்காயமும், 2 பேருக்கு 40 சதவீதம் தீக்காயமும் ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகம் வரும் அந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெடி விபத்து குறித்து தேவசம் போர்டு அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேர் விபத்து: முதல் அமைச்சர் நேரில் அஞ்சலி

G SaravanaKumar

பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்; முதலமைச்சர்

G SaravanaKumar

தேர்தலில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 % இட ஒதுக்கீடு: டிசம்பர் 3 இயக்கம் கோரிக்கை!

Saravana