முக்கியச் செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 250 கன அடியில் இருந்து 500 அடியாக உயர்த்தி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கிருஷ்ணா நதி நீர் வரத்தாலும், கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் மழை காரணமாகவும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் மொத்த நீர் இருப்பு 24 அடியில் 23.60 அடியாக உள்ளது. நீரின் கொள்ளளவு 3,540 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து 775 கன அடியாக உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 250 கன அடி நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழை காரணமாக, கிருஷ்ணா நதிக்கு நீர்வரத்து 750 கன அடியாக அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதன்காரணமாக இன்று காலை 9 மணி அளவில்ஏரியில் இருந்து உபரிநீர் 250 கன அடியில் இருந்து 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர் காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

-ம.பவித்ரா

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காயத்ரி ரகுராமுக்கு முன் ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம்

Janani

இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட்: நியூசி. கேப்டன் வில்லியம்சன் டவுட்!

Ezhilarasan

அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதி

Gayathri Venkatesan