முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

செங்கல்பட்டு தடுப்பூசி மையம்: பயன்பாட்டுக்கு கொண்டுவர விஜயபாஸ்கர் வலியுறுத்தல்!

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை மத்திய சுகாதாரத்துறை தலையிட்டு உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் கொரோனா தடுப்புக் ஆலோசனைக் குழு உறுப்பினருமான விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருந்துகளை மத்திய அரசிடமிருந்து பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் உற்பத்தியை தொடங்க முயற்சி மேற்கொண்டு வரும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்த அவர், மத்திய சுகாதாரத்துறை இப்பிரச்னையில் தலையிட்டு உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement:

Related posts

பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியலை வழங்க முடியாது:தேர்தல் ஆணையம்!

Halley karthi

தனி விமானத்தில் ஐதராபாத்.. ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா !

Halley karthi

மக்கள் பிரச்னைக்கு திமுகவால்தான் தீர்வுக் காணமுடியும் – ஸ்டாலின்

Gayathri Venkatesan