நிலை மறந்தவன் திரைப்படத்தை அனைத்து தேசபக்தர்களும் பார்க்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகத்தை வன்முறை காடாக மாற்றுவதற்கு இன்டெலிஜென்ட் போலீசார் செயல்பட்டால் அது ஏற்புடையதல்ல. இதனை தலைமை அலுவலகத்தில் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நிலை மறந்தவன் திரைப்படம் திரையிட்ட தியேட்டருக்கு எந்த இன்டெலிஜென்ட் ஆபிசர் போன் செய்தாரோ அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
இந்து மக்களுக்கு விரோதமாக காவல்துறை இறங்கி இருப்பதை பாஜக வன்மையாக கண்டிப்பாதகவும் எத்தனையோ நல்ல படங்கள் வரத்தான் செய்கிறது. கமலஹாசன் எடுத்த படத்திற்கு மிரட்டல் வந்ததால் மண்டியிட்டு வெளிநாடு செல்வதாக நாட்டை விட்டு ஓடுவதாக கண்ணீர் வடித்தார். கமல்ஹாசனுக்கு முதுகெலும்பே கிடையாது. அவர் ஒரு கோழை. ஆனால் நிலை மறந்தவன் திரைப்படத்தை ஒவ்வொரு தேச பக்தர்களும் தேடிச் சென்று பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல ஊர்களில் இந்த திரைப்படத்தை திரையிடக் கூடாது என்று காவல்துறை மற்றும் அரசு மிரட்டல் விடுகின்றனர். நிலை மறந்தவன் திரைப்படம் சமூக விரோதிகளை வெளிக்காட்ட கூடிய நல்ல திரைப்படம் என்றும் தெரிவித்தார்.








