மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த கணவர்

முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து குழுந்தை பெற்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   தேவகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 34 வயதான பிரபாகரன். இவருக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த…

முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து குழுந்தை பெற்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

தேவகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 34 வயதான பிரபாகரன். இவருக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருக்கும் கடந்த 2020 பிப்ரவரி மாதம், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. பிரபாகரன் சென்னை ஐஐடியில் பிஎச்டி படிப்பு படித்ததாக கூறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், பிரபாகரனுக்கு அவரது கல்லூரி தோழியான மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது மனைவியான பெண் மருத்துவருக்கு தெரிய வந்துள்ளது. அது குறித்து கணவரிடம் கேட்டபோது அவர் சரிவர பதிலளிக்காத நிலையில், கணவர் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியை பிரிந்து சென்றுள்ளார் பிரபாகரன்.

சில நாட்களில், வாட்ஸ் அப்பில், தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் வீடியோ ஒன்றை தன் மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார் பிரபாகரன். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி, அசோக் நகர் காவல் நிலையத்தில் தனது கணவர் தன்னை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து கொண்டதோடு, சட்ட விரோதமாக குழந்தை பெற்று தனியாக வசித்து வருவதாக புகார் அளித்தார்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார், பிரபாகரனை விசாரணை செய்ததில், அவர் மனைவியை ஏமாற்றிவிட்டு, வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து குழந்தை பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஐஐடியில் படித்தது போல் போலி சான்றிதழ் தயாரித்ததும் விசாரணையில் அம்பலமானது. இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்த அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.