”விளம்பர ஆட்சி நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்” – பழனிசாமி விமர்சனம்!

முதல்வர் ஸ்டாலின் விளம்பர ஆட்சி நடத்தி வருவதாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தற்போது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மக்களை சந்தித்த்து உரையாற்றினார்.

அவர் பேசியது,

“ஸ்டாலின் இன்று பல பொதுக்கூட்டங்களில் பேசிக் கொண்டிருந்தார் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்று கூறி வருகிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக அழைக்கப்படும் கட்சி திமுக மட்டும் தான். திராவிட முன்னேற்றக் கழகம் குடும்ப அரசியலாக மாறி வருகிறது ஸ்டாலின் ,உதயநிதி, இன்பநிதி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட முதலமைச்சர்கள் உள்ளனர் ஒரு முதலமைச்சருக்கே தமிழகம் தாங்கவில்லை. இதில் நீங்க குடும்பத்தில் மட்டுமே நான்கு முதலமைச்சர் இருந்தால் எவ்வாறு தமிழகம் தாங்கும் .

தமிழகத்தில் 6000 மது கடைகள் உள்ளன மதுபான பாட்டிலுக்கு இத னை எதையும் கண்டுகொள்ளாமல் டாஸ்மார்க் ஊழல் மட்டுமே 22000 கோடி டாஸ்மார்க் அலுவலகத்தில் 44 ஆயிரம் கோடி ஊழல் நடந்து இருக்கலாம் என ஈடி அலுவலர்கள் கூறுகின்றனர்.

தற்போது மின்சார கட்டணத்தை பார்த்தாலே பொதுமக்களுக்கு ஷாக் அடிக்கிறது. இன்று எங்கு பார்த்தாலும் போதை பொருள் விற்பனை அமோகம் போல பார்த்தால் கஞ்சா விற்பனை தற்பொழுது சாக்லேட்டில் கிடைப்பதாக  நான் சட்டமன்றத்தில் உரையாற்றினேன். கஞ்சா போதை ஆசாமிகளால் கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கொங்கு மண்டலத்தில் மட்டும் பொது இடங்களை அபகரிக்கின்றனர். காவல்துறை அதிகாரிகள் உட்பட ஆறு பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சி அமைந்த பின் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் துவங்கப்படும் அத்துடன் புதுமணப்பெண்ணுக்கு பட்டுப்புடவை புதுமனை மாப்பிள்ளைக்கு வேஷ்டி சர்ட் வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் மருத்துவ கல்லூரி படிப்பு செலவு முழுவதும் அரசியல் ஏற்றுக் கொண்டது. மீண்டும் அண்ணா திமுக ஆட்சி வந்தால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவித்தார். கொரோனா காலத்தில் தமிழ்நாட்டில் அனைத்து மாணவர்களையும் ஆல் பாஸ் செய்து கொடுத்தது.

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 46 பிரச்சனைகள் உள்ளது 46 பிரச்சனைகளையும் மனதாக பெற்று தீர்த்து வருவதாக ஸ்டாலின் விளம்பர ஆட்சி நடத்தி வருகிறார். இந்த பிரச்சனைகளை கண்டுபிடிக்க தமிழ்நாட்டுக்கு ஒரு முதலமைச்சர் தேவையா..?

திமுக அரசு நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறி என ஆட்சிக்கு வந்தது. ஆனால் ரகசியத்தை வெளியிடுவேன் என கூறிய ஸ்டாலின் அவர்கள் ரகசியத்தை வெளியிட்டார்” என பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.