ஜூன் 23 – ஜூலை 11 அதிமுகவின் இரண்டு பொதுக்குழுக்களுக்கு இடையே நடந்தது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து உட்கட்சி பூசல் ஏற்பட்டது. இந்த பிரச்னை நடந்து கொண்டிருக்கும் போது கடந்த ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது அதிமுக பொதுக்குழுவில் திட்டமிடப்பட்ட தீர்மானங்களை தவிர்த்து புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என அதிகாலை 4.30 மணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி கூடினாலும் புதிய தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றாமல் கடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவில் கூடியிருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஜூன் 24, 2022 – தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் பிரதமர், உள்துறை அமைச்சருடன் ஓ. பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார்
ஜூன் 27, 2022 – அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி தரப்பு மேல்முறையீடு செய்யலாம் என கருதி ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்
ஜூன் 28, 2022 – ஒருங்கிணைப்பாளர் அனுமதியின்றி பொதுக்குழு நடைபெற்றதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்.
ஜூன் 28, 2022 – அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானம் தவிர புதிய தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தார்.
ஜூன் 29, 2022 – உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் படிவத்தில் கையொப்பமிடுவது தொடர்பாக இ.பி.எஸ் க்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதினார்.
ஜூன் 30, 2022 – அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதியிருக்கும் கடிதம் செல்லத்தக்கது என ஓ.பி.எஸ் க்கு இ.பி.எஸ் பதில் கடிதம் எழுதினார்.
ஜூலை 2, 2022 – குடியரசு தலைவர் தேர்தலில் ஆதரவு கேட்பதற்காக பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு சென்னை வந்தார். அப்பேழ ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும், திரௌபதி முர்முவை தனித்தனியே சந்தித்து ஆதரவளித்தனர்.
ஜூலை 7, 2022 – அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கில் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது.
ஜூலை 8, 2022 – வழக்கின் இரண்டாவது நாள் விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு திங்கள் காலை 9 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஜூலை 11, 2022 – காலை 9.15 மணிக்கு பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ளது.









