இந்தியாவில் திராவிடம் என்பது இல்லை, பஞ்ச திராவிடம் தான் இருந்தது. இந்த நாட்டின் பிரதமர் கூட திராவிடன் தான் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சென்னை 134வது வார்டில் வசிக்கும் மக்களின் சேவைக்காக உருவாக்கியுள்ள உங்கள் மாம்பலம் ஆப் (UMA) எனும் செயலியை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, முதல் முதலில் 2004ம் ஆண்டு நான் உமா ஆனந்தனை சந்தித்தது ஒரு போராட்ட களத்தில் தான். 18 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து அவர் மக்கள் பணி செய்து வருகிறார்.
தேசத்தின் உடைய கலாச்சாரம் பண்பாடு மாறாமல் இருக்க வேண்டும் என்று சொன்னால் அதற்காக கேந்திரமாக இருப்பது நம்மளுடைய கோவில்கள் தான். நம் கோவில்கள் இல்லை என்றால் இன்று இந்து மதம் இல்லை, சனாதான தர்மம் இல்லை. இன்றைக்கு ஒரு சரியான விஷயத்தை ஆளுநர் பேசினால் சர்ச்சை ஆகிறது.
இந்தியாவில் திராவிடம் என்பது இல்லை, பஞ்ச திராவிடம் தான் இருந்தது. இந்த நாட்டின் பிரதமர் கூட திராவிடன் தான். இந்தப் பகுதியில் பாஜகவை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றதாலே அயோத்தியா மண்டபத்தை அரசாங்கம் எடுக்கிறது.
இந்த செயலியை பற்றி சென்னையில் இருக்கின்ற 200 வார்டுகளிலும் தெரிய வேண்டும்.
அடுத்த மாநகராட்சி தேர்தல் வரும் போது சென்னை மாநகராட்சி மேயர் பாஜகவை சார்ந்தவராக இருக்க வேண்டும் என்று கூறினார்.








