போதைப் பொருள் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது-மதுரை காவல் துறை எச்சரிக்கை

மதுரை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று அந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் எச்சரித்துள்ளார். மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத்…

மதுரை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று அந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் எச்சரித்துள்ளார்.

மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மதுரை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை/கடத்தலில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களது உறவினர்களின் சொத்துக்கள் முடக்கப்படும். போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களின் 7 கோடியே 12 இலட்சத்து ஆயிரத்து 903 ரூபாய் சொத்துகள் முடிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா வழக்கில் தொடர்புடைய 205 நபர்களுக்கு LIR வழங்கப்பட்டும், 105 நபர்களுக்கு பினை உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் 35 பேர் கைது செய்யப்பட்டும், 11 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்களின் உறவினர்கள் 41 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் சிவ பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.