“5 ரூபாய் கொடுத்தாலும் அது உதவிதான்” | குஷ்புக்கு பதிலடி கொடுத்த நடிகை அம்பிகா!

5 ரூபாய் கொடுத்தாலும் அது உதவிதான் அதனை பாராட்ட வேண்டும் என நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் 1.16 கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு…

5 ரூபாய் கொடுத்தாலும் அது உதவிதான் அதனை பாராட்ட வேண்டும் என நடிகை அம்பிகா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் 1.16 கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு, “பெண்களுக்கு 1000 ரூபாய் பிச்சை போட்டுவிட்டால் திமுகவுக்கு ஓட்டுப்போட்டு விடுவார்களா” எனப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து குஷ்புவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குஷ்புக்கு எதிராக சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மகளிர் உரிமைத் திட்டம் குறித்து குஷ்புவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு நடிகை அம்பிகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “யாராக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, அவர்கள் உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ அதனை ஏற்றுக் கொண்டு பாராட்டுங்கள். பாராட்ட மனமில்லை என்றால் அமைதியாக இருங்கள். பிச்சை என அவமானப்படுத்தும் சொற்களை பயன்படுத்தாதீர்கள். 5 ரூபாய் கொடுத்தாலும் அது உதவிதான்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.