சோதனைகள் வந்தாலும் வெற்றி பெறுவோம்! – எடப்பாடி பழனிசாமி

அதிமுகவின் தலைவர்கள் சோதனைகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சேலத்திற்கு நேற்று எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார்.…

அதிமுகவின் தலைவர்கள் சோதனைகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சேலத்திற்கு நேற்று எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அவருக்கு சேலம் மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து இன்று, அண்ணா பூங்காவில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்பவர்கள் மத்தியில் உள்ளவர்கள்தான், மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல என்று தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பது தொடர்பாக டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டதாகவும் கூறினார்.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2023 : விராட் கோலி – டூபிளஸ்ஸிஸ் அதிரடி; மும்பையை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி

நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் வரும் என எதிர்பார்ப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களில் ஒரு சிலரை தவிர, மற்ற அனைவரும் மீண்டும் தாய் கழகத்தில் இணைய அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சியில் இணைவது அவரவர் ஜனநாயக உரிமை என்றும் கூறினார்.

எம்ஜிஆர், அதிமுக கட்சியை துவங்கும்போது பல்வேறு சோதனைகளை சந்தித்ததாகவும்,  அவரது மறைவருக்கு பிறகு ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை சந்தித்ததாகவும் கூறிய அவர், அதிமுகவில் எதிர்வரும் தலைவர்கள் சோதனைகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவோம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.