கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்து
எரித்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயில், கோழிக்கோடு அருகே சென்றபோது D1 கோச்சில் மர்ம நபர் ஒருவர் பிற பயணிகள் மீது தாம் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.
இதனால், பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறமுயன்றநிலையில் பாதி வழியிலேயே ரயில் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் சிறு சிறு சிறு காயங்களுடன் தப்பித்த எட்டு பேரை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதே நேரத்தில் தண்டவாளத்தில் இருந்து ஒரு பெண், ஒரு குழந்தை மற்றும் ஒரு ஆண் என மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மர்ம நபர் விட்டுச் சென்ற பையைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த பையிலிருந்து சிவப்புத் துணி மற்றும் நோட் புக் ஆகியவை கைப்பற்றப்பட்டு இருப்பதால், ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த மர்ம நபர் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.








