முக்கியச் செய்திகள் விளையாட்டு

3 வது டெஸ்ட்: ரோகித், புஜாரா அரைசதம், போராட்டத்தில் இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ரோகித் சர்மா அரைசதம் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் புஜாரா அரைசதம் எடுத்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, லீட்சில்
உள்ள ஹெட்டிங்லேயில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 78 ரன்னில் சுருண்டது.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத் தியது. அந்த அணி 432 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் அந்த அணி 354 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 121 ரன்கள் எடுத்தார். ரோரி பர்ன்ஸ் 61 ரன்களும் ஹசீப் ஹமீத் 68 ரன்களும் டேவிட் மலான் 70 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து இந்திய அணி தனது 2 வது இன்னிங்ஸை தொடங்கியது. ரோகித் சர்மாவும் கே.எல்.ராகுலும் நிதானமாக ஆடினர். மிகவும் பொறுமையாக ஆடிய கே.எல்.ராகுல் 8 ரன் எடுத்தபோது ஓவர்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். ரோகித் சர்மா அரைசதம் கடந்த நிலையில், ராபின்சன் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். ரோகித் 156 பந்துகளை சந்தித்து 59 ரன்கள் எடுத்தார். பின்னர் புஜாராவுடன் கேப்டன் விராத் கோலி இணைந்தார்.

இருவரும் சிறப்பாக ஆடி வருகின்றனர். கடந்த சில போட்டிகளில் சொதப்பி வந்த புஜாரா அரைசதம் எடுத்து ஆடி வருகிறார். 55 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப் புக்கு 151 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. புஜாரா 66 ரன்களுடன் விராத் 10 ரன்களுடன் களத் தில் உள்ளனர்.

வலுவான நிலையில் இங்கிலாந்து அணி உள்ளதால், அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு!

தலிபான்களால் கிரிக்கெட்டுக்கு பாதிப்பு இல்லை – அப்ரிடி கருத்து

Saravana Kumar

கோடநாடு வழக்கு மறு விசாரணைக்கு தடை இல்லை

Saravana Kumar