ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
பிரதமரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கன்னியாகுமரி முதல் டெல்லி வரை செல்லும் நெடும்பயணம், கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்திலிருந்து துவங்கியது. இந்த பயணத்தை மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, “10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் விவசாயிகள் செல்ல இருக்கும் இந்த நிகழ்வை துவக்கி வைக்க வந்துள்ளேன். இவர்களது பயணம் வெற்றி அடையவேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். உணவு மானியம், உர மானியம் போன்றவற்றை குறைக்கக் கூடாது.
50 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய மானியத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். உரவிலை குறைப்பு குறித்து மதிமுக சார்பில் பல இடங்களில் நாங்கள் பேசி வருகிறோம். ஆர்கானிக் ஃபார்மிங் முறையை நாங்களும் வரவேற்கிறோம். ஆனால் இலங்கையில் நடைபெற்ற பொருளாதார வீழ்ச்சி பற்றி அனைவருக்கும் தெரியும். இதனை
போன்று நடக்கக் கூடாது.
இதையும் படியுங்கள் : ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் : Live Updates
காட்டுபன்றியை வனவிலங்கு பட்டியல் 4ல் இருந்து 3-க்கு கொண்டு வந்தால் காட்டுபன்றியால் விவசாய அழிவை குறைக்க முடியும். கேரள அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காட்டுப்பன்றியை அழிக்க சட்டம் கொண்டு வந்துள்ளார்கள். அதிலும் பல சிக்கல் இருப்பதால் மத்திய அரசு நிரந்தர தீர்வு கொண்டு வர வேண்டும். காட்டுப்பன்றி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து தஞ்சாவூர் வரையிலும் அதிகரித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணி
பெற்றுள்ளது. இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.
வடமாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்றால், பாஜகவை வீழ்த்த முடியும். சில மாநிலங்களில் பாஜக தோல்வியடைந்தாலும், குதிரை பேரம் மூலம் வெற்றி பெறுகிறார்கள். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதை வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.