ஆஸ்கர் விருதுதை முன்னிட்டு நடிகர் ராம்சரண் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வலம் வரும் படங்கள் வைரலாகி வருகின்றன.
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான RRR படம் கடந்தாண்டு வெளியாகி பிரமாண்ட வெற்றியை பெற்றது. தற்போது பல்வேறு வெளிநாட்டு விருதுகளை அந்தப்படம் குவித்து வருகிறது. முக்கியமாக ‘நாட்டு.. நாட்டு’ பாடல் ஏற்கனவே பல்வேறு விருதுகளை வாங்கியுள்ள நிலையில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்காக படத்தை ப்ரோமோஷன் செய்ய படக்குழுவுடன் ராம் சரண் அமெரிக்கா சென்றுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்க: இத்தாலி பிரதமருக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு!
ஸ்டைலிஷான தோற்றத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை வலம் வரும் ராம்சரண், அங்குள்ள தொலைக்காட்சிகளுக்கு நேர்காணல் வழங்கி வருகிறார். இதுகுறித்து ஸ்டைலினா அவுட்ஃபிட்டில் எடுத்த ஒரு புகைப்படத்தையும் ராம்சரண் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்தப் பதிவு சுமார் 10 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.
ஆஸ்கரை முன்னிட்டு RRR அமெரிக்காவில் மார்ச் 3ம் தேதி முதல் மீண்டும் திரையிடப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே ஹவுஸ்புல் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 12ம் தேதி நடக்கவுள்ள ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
-ம.பவித்ரா