காலி இடத்தில் திடீரென பற்றிய தீ – எரிந்த இருசக்கர வாகனங்கள்!

ஈரோட்டில் காலி இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று இருசக்கர வாகனங்கள் தீயில் கருகியது. ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் அடுத்த பாரதி புரத்தில் சுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான காலி இடத்தில் திடீரென தீ பற்றியுள்ளது.இதில்…

ஈரோட்டில் காலி இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று இருசக்கர வாகனங்கள்
தீயில் கருகியது.

ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் அடுத்த பாரதி புரத்தில் சுப்ரமணியம் என்பவருக்கு
சொந்தமான காலி இடத்தில் திடீரென தீ பற்றியுள்ளது.இதில் அருகில் குடியிருந்து வரும் யோகேஸ்வரன் என்பவரிடம் சர்வீஸ்க்கு வந்திருந்த மூன்று இருசக்கர வாகனம்
மற்றும் சைக்கிள் ஆகிய வாகனங்கள் தீயில் கருகியது.இதனையடுத்து சம்பவ
இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.மேலும் அப்பகுதியில் தீ பரவியது குறித்து தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.