அம்பேத்கரின் 133ஆவது பிறந்த நாளையொட்டி அவரின் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அம்பேத்கரின் 133ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. அம்பேத்கரின் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு, அமைச்சர்கள் கே என் நேரு, ஐ பெரியசாமி, எ வ வேலு, மஸ்தான், மா சுப்பிரமணியன், சாமிநாதன், சேகர்பாபு, விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாக தமிழ்நாடு அரசினால் கொண்டாடப்படுவதுடன், சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பும் தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.
- பி.ஜேம்ஸ் லிசா







