முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’வேட்பாளர் யார் என்பதை விரைவில் சொல்வோம்’ – ஜெயக்குமார் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை விரைவில் சொல்வோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேர்தலையொட்டி இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய 7-ம் தேதி வரை காலம் உள்ளது. வேட்பாளர் யார் என்பதை விரைவில் சொல்வோம். களத்தில் நாங்கள்தான் இருக்கிறோம். நாங்கள்தான் வெல்வோம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இன்னும் நாட்கள் இருக்கிறது. பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடைபெற்று வருகிறது. தோழமை, நட்பு என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 40 நமதே என எங்கள் கூட்டணி வெல்லும். ரவீந்திரநாத் விவகாரத்துக்கு தம்பிதுரை விளக்கமளித்துவிட்டார். ரவீந்திரநாத் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர். கற்காலத்தை போல் அமைச்சர் கல்லை தூக்கி போடுகிறார். அமைச்சர் நாசரை பார்த்தால் பயந்து ஓட வேண்டியதாகவுள்ளது” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: இணைய வழி பதிவு இன்று தொடக்கம்

G SaravanaKumar

முழு ஊரடங்கிற்குத் தயாராகும் மகாராஷ்டிரா மாநிலம்!

Halley Karthik

குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

G SaravanaKumar