முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்; மூத்த நிர்வாகிகளோடு ஓபிஎஸ் ஆலோசனை

ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளோடு ஓபிஎஸ்  ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி எனவும்  கூடிய விரைவில் வேட்பாளர் தேர்வு முடிந்தவுடன் , வேட்பாளர் அறிவிக்கப்படும் எனவும் ஓபிஎஸ் ஏற்கனவே தெரிவித்த நிலையில்  சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் வைத்திலிங்கம், கு.ப. கிருஷ்ணன், ஜே சி டி பிரபாகர்,உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு,செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜே சி டி பிரபாகரன், ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஓ பன்னீர்செல்வம் மேற்கொண்டு இருப்பதாகவும் வேட்பாளர் அறிவிப்பு தொடர்பான நல்ல செய்தியை விரைவில் அவர் வெளியிடுவார் எனவும் தெரிவித்தார்.

நோட்டாவுக்கு கீழே வாக்குகள் வாங்குவோம் என கூறிய ஜெயக்குமாரிடம், நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இதே கேள்வியை அவரிடம் கேளுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொழில்துறை குறித்த வில்சன் எம்பி கேள்விக்கு அரசு பதில்

Mohan Dass

புரெவி புயல் பாதிப்புக்கு 1,514 கோடி ரூபாய் நிவாரணம் தேவை! -மேலாண்மைத்துறை ஆணையர்

Nandhakumar

டிஜிபி சைலேந்திர பாபுவுடன் என்ஐஏ இயக்குனர் தின்கர் குப்தா திடீர் சந்திப்பு

EZHILARASAN D