முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி – ரோஹித் சர்மா, சுப்மன் கில் அரைசதம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. கடந்த 18-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 12 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ராய்ப்பூரில் நடந்த 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று மதியம் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாட  தொடங்கினர். தற்போது சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா அரைசதம் அடித்து அவுட் ஆகாமல் விளையாடி வருகின்றனர். இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 178 ரன்களுடன் விளையாடி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மறைந்த இங்கிலாந்து இளவரசியின் கார் ரூ.6.10 கோடிக்கு விற்பனை

Dinesh A

’10 வருஷமா அணியில் ஒரு மாற்றமும் பண்ணலை’ : தோனி பெருமை!

Halley Karthik

பிரபல ஹாலிவுட் நடிகைக்கு திருமணம்!

Web Editor