ஈரோடு இடைத்தேர்தல் ; மூத்த வழக்கறிஞர்களுடன் ஓபிஎஸ் ரகசிய ஆலோசனை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிவோம் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ள நிலையில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து ஓபிஎஸ் ரகசிய ஆலோசனை செய்து வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள்…

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிவோம் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ள நிலையில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து ஓபிஎஸ் ரகசிய ஆலோசனை செய்து வருகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.  திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ” ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக எங்கள் தரப்பு போட்டியிடுகிறது. இரட்டை இலை சின்னத்திற்கான முழு உரிமை எங்களுக்கு உள்ளது. இரட்டை இலை சின்னத்திற்காக ஒருங்கிணைப்பாளராக நான் கையெழுத்திடுவேன்” என்று கூறினார்.
இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இன்று காலை முதலே அதிமுக கூட்டனியில் உள்ள கூட்டனி கட்சிகளையும் சந்திக்க உள்ளதாக அறிவித்த் நிலையில் தற்போது   மூத்த வழக்கறிஞர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இடைத்தேர்தலில் போட்டியிவோம் என்று அறிவித்த  நிலையில் அதன்  சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் சின்னம் தொடர்பான சிக்கல்கள் குறித்து இந்த கூட்டத்தில் வழக்கறிஞர்களோடு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் உள்ள தனியார் இடத்தில் இந்த ஆலோசனை ரகசியமாக நடைபெற்ற வருகிறது. மூத்த வழக்கறிஞர்களுடன் நடைபெறும் இந்த ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.