ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக கூட்டணியில் இடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா. திருமகன் ஈவெரா மறைவுக்கு பின் ஈவிகேஎஸ் இளங்கோவனை இடைத்தேர்தலில் நிற்க சொல்லி அவரது ஆதரவாளர்கள் கேட்டுகொண்டதாக தகவல்கள் வந்தன.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தான் போட்டியிடவில்லை என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். மேலும், தனது இளைய மகனுக்கு வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் இளைஞர் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கேட்டுள்ளதாகவும் ஈவிகேஎஸ் தெரிவித்துள்ளார்.







