முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு இடைத்தேர்தல் – அண்ணாமலையுடன் இபிஎஸ் தரப்பு சந்திப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இபிஎஸ் தரப்பு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை இன்று சந்தித்தனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதேபோல் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதாக இன்று காலை தெரிவித்ததோடு, தமாக தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கோரினார். இதையடுத்து அதிமுக மூத்த நிர்வாகிகள், தலைமை அலுவலகத்தில் திடீர் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக இபிஎஸ் தரப்பு அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், ஜெயக்குமார், வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, உண்மையான அதிமுக நாங்கள் தான் என்பதால் ஈரோடு இடைத்தேர்தலில், எங்கள் தரப்புக்கு ஆதரவு தர வேண்டும் என்று இபிஎஸ் தரப்பு அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையிடம் கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை கண்டிப்பாக அமல்படுத்தப்படும் – துணை நிலை ஆளுநர் தமிழிசை உறுதி

EZHILARASAN D

விஜய் படத்திற்கு குவியும் நட்சத்திரங்கள்!

Vel Prasanth

வேளாண்மை சீர்திருத்தங்கள் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கக் கூடியவை!: பிரதமர் மோடி

Saravana