ஈரோடு இடைத்தேர்தல்: திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்

ஈரோட்டில் விதிகளை மீறி செயல்பட்ட திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர…

ஈரோட்டில் விதிகளை மீறி செயல்பட்ட திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு கட்சியை சேர்ந்தவர்களும் வித்தியாசமான முறையில் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். டிரம்ஸ் அடித்தும், வடை சுட்டும், தோசை ஊற்றியும், தேநீர் கடைகளில் தேநீர் தயாரித்தும், ஜிலேபி சுட்டும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இதனால் ஈரோட்டில் தேர்தல் திருவிழா களைக்கட்டியுள்ளது.

இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குகள் வாங்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நடத்தை விதிகளை தேர்தல் அதிகாரிகள் முழுவீச்சில் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் பணிமனைகள் உரிய அனுமதியின்றி அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கல்லுக்கடை ராஜாஜி வீதியில் செயல்பட்ட திமுக பணிமனையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். விதிகளை மீறியதற்காக மொத்தம் 10 இடங்களில் திமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதே போல ஆலமரத்து தெருவில் உள்ள அதிமுக பணிமனை உட்பட மொத்தம் 4 அதிமுக பணிமனைகளுக்கு விதிமீறல் குற்றச்சாட்டின்கீழ் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.