ஈரோடு இடைத்தேர்தலில் 108 வேட்பாளர்களை களமிறக்க நிறுத்த போவதாக ஈரோடு
மாநகர மக்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். வெறும் 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு அதற்கு பிப்ரவரி 27ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் இன்னும் ஓரிரு தினங்களில் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. அதில் ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகே சிஎஸ்ஐ நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 12.66 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது என 2 மாதங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிலத்தை அரசு கையகப்படுத்தவும், அந்த நிலத்தின் வழியாக செல்லும் 80 அடி சாலை திட்டத்தை நிறைவேற்றவும் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 108 வேட்பாளர்களை நிறுத்த போவதாக ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கம் மற்றும் ஈரோடு
மாநகர மக்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் ஈரோட்டில் ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 108 வேட்பாளர்களை இடைத்தேர்தலில் போட்டியிட வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
– யாழன்