ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேர்தலையொட்டி இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
இந்நிலையில் பாஜக மாநில துணைத்தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், “அண்ணாமலை சார்பில் பாஜக நிர்வாகிகள் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் முறையாக நடைபெறாது என்பதற்கான ஆதாரங்களை தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “அமைச்சர்களின் ஆடியோ, வீடியோ ஆதாரங்களை அளித்துள்ளோம். அதன் மீதான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம். முறையான தேர்தல் நடைபெறுவதற்காக வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும். வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வதற்கான அளவிற்கு ஆதாரங்கள் உள்ளது.மத்திய பாதுகாப்பு படையினரைக் கொண்டு தேர்தலை நடத்த வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தேர்தல் தொடர்பாக இன்று மாலை பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்ட முடிவை தேசிய தலைமைக்கு அனுப்புவோம்” என்று தெரிவித்தார்.







