போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக ஆளுநர் ஆர்என் ரவியை இன்று இபிஎஸ் சந்தித்தார்.
சென்னையில் கடந்த 8ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் தொடர்பில் இருந்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன் தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த அவர், போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.







