முக்கியச் செய்திகள் தமிழகம்

’இரட்டை இலையே வெல்லும்’: முதல்வர், துணை முதல்வர் கூட்டறிக்கை

நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும், இரட்டை இலையே வெல்லும் என்பதை குறிப்பிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது. இந்த கருத்துக் கணிப்புகளில் திமுக கட்சிதான் அரிதி பெரும்பான்மையைக் கைப்பற்றும் என்று குறிப்பிடப்பட்டது. இதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் திமுக வெற்றிபெறும்போது,தொண்டர்கள் வெற்றிக்கொண்ட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் வீட்டிலேயே கொண்டாடும்படி வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிக்கையில் ‘ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளால் அதிமுகவினர் எந்த மனச்சோர்வும் அடையவில்லை. நம்மைச் சோர்வடையச் செய்யும் சூழ்ச்சிகளைத் துணிவுடன் எதிர்கொண்டு செயல்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுகவினர் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடந்தால் உரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னரே முகவர்கள் வெளியே வர வேண்டும். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறாது என்றே கருத்துக் கணிப்புகள் கூறினர். ஆனால் அதற்கு நேர்மாறாக முடிவுகள் வந்தது. தற்போது வெளியாகும் கணிப்பு முடிவுகள் நம்மை ஜனநாயக கடமை ஆற்றவிடாமல் தடுக்கும் முயற்சி. நம்மைச் சோர்வடையச் செய்யும் சூழ்ச்சிகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை நம்ப வேண்டாம்’ இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

டோக்கியோ ஒலிம்பிக்கில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

Jeba Arul Robinson

அடேங்கப்பா.. இன்ஸ்டாவில் இவருக்கு இவ்ளோ பாலோயர்களா?

Ezhilarasan

டெல்லி டிராக்டர் பேரணி: வன்முறையை தூண்டியதாக நடிகர் தீப் சித்து கைது!

Jayapriya