கொரோனா சிகிச்சை மையமாக மாறிய மசூதி!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து டெல்லியில் உள்ள கிரீன் பார்க் மசூதி, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது.இதன் காரணமாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும்…

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து டெல்லியில் உள்ள கிரீன் பார்க் மசூதி, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது.இதன் காரணமாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1,87,62,976 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,97,540 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந் துள்ளனர். இதையடுத்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,53,84,418 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வருகிறது. பல மருத்துவமனைகளில் படுக்கைக் கிடைக்காமல் ஆம்புலன்ஸ்களிலும் மருத்துவ மனை வாசலிலும் நோயாளிகள் இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள கிரீன் பார்க் மசூதி, கொரோனா நோயாளிகளுக்கான 10 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மசூதியின் இணை செயலாளர் கூறும்போது, ’நாங்கள் மருந்துகள், முகக் கவசம், கிருமிநாசினிகள், நோயாளிகளுக்கான பிபிஇ கிட்ஸ் ஆகியவற்றை வழங்க இருக்கிறோம். மருத்துவர்களின் அனுமதியுடன் கொரோனா நோயாளிகளை அனுமதிப்போம். அவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்கிறோம் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.