கொரோனா நோயாளிகளுக்காக ஆம்புலன்ஸ் ஓட்டும் நடிகர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, நடிகர் ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டி வருவதை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருவதை அடுத்து ஏராளமானவர்கள் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, நடிகர் ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டி வருவதை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருவதை அடுத்து ஏராளமானவர்கள் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள், கொரோனா பாதிக்கப் பட்டவர்களால் நிரம்பி வழிகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் திரையுலகினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் பிரபல கன்னட நடிகர் அர்ஜுன் கவுடா, கொரோனா நோயாளிகளுக்கு உதவுதற்காக, ஆம்புலன்ஸ் டிரைவாக மாறியிருக்கிறார். யுவரத்னா, ரஸ்டம், ஒடியா, ஆ துருஷ்யா உட்பட சில படங்களில் அர்ஜுன் கவுடா நடித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, புரொஜக்ட் ஸ்மைல் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ள, அர்ஜுன் கவுடா, ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கிற்கும் இவர் உதவி வருகிறார். இதுபற்றி தகவல் தெரிந்ததும் சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர்.

அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அர்ஜுன் கவுடா, ’கடந்த சில நாட்களாக இந்த பணியில் இருக்கிறேன். இன்னும் 2 மாதத்துக்கு, நிலைமை சீராகும்வரை இதைத் தொடர இருக்கிறேன். இதுவரை 6 பேருக்கு இறுதிச் சடங்குகளில் உதவி இருக்கிறேன். தேவைப்படுவோருக்கு ஆக்ஸிஜன் வழங்கவும் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித் துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.