முக்கியச் செய்திகள் தமிழகம்

நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி

வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை
கடைகளிலும் வழங்கப்படும் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து
பொதுமக்களுக்கு வழங்கப்படும்  என அமைச்சர் சக்கரபாணி பேசியுள்ளார். 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலை முகவர்களுடன், பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அரவை ஆலை முகவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


கூட்டத்தில் பேசிய  அமைச்சர் சக்கரபாணி, அரவை ஆலை முகவர்களின் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறிய அவர் கடந்த 18 மாதமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை முழுவதுமாக அரைத்து பெரும் சாதனை படைத்துள்ளனர் என்றும் செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என்றும் கூறினார்.

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும்
செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் அது
தொடர்பாக இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது, 100 கிலோ சாதாரண அரிசியுடன்
ஊட்டச்சத்துகள் கலந்த செறிவூட்டப்பட்ட 1 கிலோ அரிசியை எவ்வாறு கலப்பது என்பது
குறித்து முகவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட இருக்கிறது என்று கூறினார்.


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பதிவு செய்து 755 அரவை ஆலைகள் உள்ளது.
நெல்லை சேமித்து வைக்க குடோன்கள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
கூறியதாவது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 755 அரவை ஆலைகள் முகவர்களுக்கு பயிற்சி மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் மூலம் வழங்கபடுகிறது என அவர் பேசினார்.


மத்திய அரசு தெரிவித்துள்ளதை அடுத்து தமிழக முதலமைச்சர் ஆணைப்படி
செரிவூட்டப்பட்ட அரிசியை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள
அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,
இரும்பு சத்து, போலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்து அடங்கியது இந்த
செறிவூட்டப்பட்ட அரிசி என்று கூறிய அவர் 100 கிலோ அரசியில் 1 கிலோ
செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்படும் என்று கூறினார்.


பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசி வரும் ஏப்ரல் மாதம்
முதல் செறிவூட்டப்பட்ட அரசுடன் கலந்து வழங்கப்படும் என தெரிவித்தார். பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், தலைமை செயலக கூட்டத்தில் பொங்கலுக்கு என்ன பொருட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டன எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.

238 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து செமி குடவுன் கட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டது. என்றும் 7 லட்சத்து 94 ஆயிரம் நெல் சேமித்து வைக்க ஏற்கனவே
உள்ள கட்டடம் மூலம் சேமிக்கப்படும் என்றும் கூறினார்.நெல்லை சேமித்து வைக்க
கட்டப்பட்டு வரும் செமி குடோன்கள் வருகின்ற ஜனவரி மாதத்தில் திறக்கப்பட்டு
பயன்பாட்டுக்கு வரும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்: சுகாதார அமைச்சர் கோரிக்கை

Web Editor

இளையராஜாவுக்கு எதிரான விமர்சனங்களுக்கு ஜே.பி.நட்டா கண்டனம்

Arivazhagan Chinnasamy

நாடுதழுவிய வேலைநிறுத்தத்தால் பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதி

Arivazhagan Chinnasamy