#ENGvsSL | முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில்…

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 236 ரன்களும், இங்கிலாந்து 358 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 89.3 ஓவர்களில் 326 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 113 ரன்களும், தினேஷ் சண்டிமால் 79 ரன்களும், ஏஞ்ஜலோ மேத்யூஸ் 65 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் மேத்யூ பாட்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 205 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 62 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, ஜேமி ஸ்மித் 39 ரன்களும், டேனியல் லாரன்ஸ் 34 ரன்களும் எடுத்தனர்.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. மேலும், இங்கிலாந்து அணி வீரர் ஜேமி ஸ்மித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.