அடித்தது ஜாக்பாட்.. பரிசுத்தொகை ரூ.40 கோடி, திக்குமுக்காடிய இளைஞர்

அந்த தகவலைக் கேட்டதும் கிள்ளிப் பார்த்துக்கொண்டார், ரஞ்சித் சோமராஜன். 13 வருடமாக வாடகை கார் ஓட்டுபவருக்கு சுமார் 40 கோடி கிடைத்தால், கிள்ளிப்பார்க்க மாட்டாரா என்ன? அவருக்கான அதிர்ஷ்டம் லாட்டரியால் வந்தது. கேரளாவை சேர்ந்தவர்…

அந்த தகவலைக் கேட்டதும் கிள்ளிப் பார்த்துக்கொண்டார், ரஞ்சித் சோமராஜன். 13 வருடமாக வாடகை கார் ஓட்டுபவருக்கு சுமார் 40 கோடி கிடைத்தால், கிள்ளிப்பார்க்க மாட்டாரா என்ன? அவருக்கான அதிர்ஷ்டம் லாட்டரியால் வந்தது.

கேரளாவை சேர்ந்தவர் ரஞ்சித் சோமராஜன் (37 வயது). 2008 ஆம் ஆண்டு முதல் அபுதாபியில் டிரைவாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 வருடங்களாக நண்பர்களுடன் இணைந்து லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்ட இவர், நமக்கெல்லாம் எங்க விழப்போகுது என்று நினைத்தபடியே அதை வாங்கி வந்திருக்கிறார். ஆனாலும் அவருக்கு ஓரத்தில் ஒரு நம்பிக்கை.

கண்டிப்பாக நமக்கும் ஜாக்பாட் அடிக்கும் என்று. கடந்த ஜூன் 29 ஆம் தேதி, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாட்டு நண்பர்கள் 9 பேருடன் இணைந்து ஜாக்பாட் லாட்டரி சீட்டை வாங்கினார். பரிசுத் தொகை 20 மில்லியன் திர்ஹாம். அதாவது இந்திய மதிப்புக்கு சுமார் 40 கோடி ரூபாய்.

இவர்கள் வாங்கிய லாட்டரிக்கு அடித்திருக்கிறது ஜாக்பாட். இதைக் கேள்விப்பட்டதும் திக்குமுக்காடி போனார் ரஞ்சித். அவருடைய போன், வாழ்த்துகளால் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

‘துபாய் டாக்ஸியில் வேலை பார்த்து வருகிறேன். கொரோனா காரணமாக சம்பளம் பிடிக்கப்பட்டதால், கஷ்டமான நிலைதான். இருந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை. ஆளுக்கு 100 திர்ஹாம் கொடுத்து என் பெயரில்தான் டிக்கெட்டை வாங்கினோம். பரிசு கிடைத்திருக்கிறது, கடவுளுக்கு நன்றி’ என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.