சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

கடன் மோசடி வழக்கு ஒன்றில் சிக்கியுள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இயங்கி வந்த தனியார் நிறுவனமான Oceanic edible international limited கடந்த …

கடன் மோசடி வழக்கு ஒன்றில் சிக்கியுள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இயங்கி வந்த தனியார் நிறுவனமான Oceanic edible international limited கடந்த  2021 ஆம் ஆண்டு வங்கியில் 225 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த  நிறுவன தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது.

இந்த தனியார் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஜோசப் ராஜ் ஆரோக்கியசாமி, விமலா ஜோசப் ஆரோக்கியசாமி, ஜேம்ஸ் வால்டர் ஆரோக்கியசாமி, டாமினிக் சாவியோ ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

104 கோடி ரூபாய் கடன் பெற்று அதை முறைகேடாக பயன்படுத்திய விவகாரத்தில், 225 கோடி ரூபாய் வரை கடன் வாங்கி வங்கிகளுக்கு இழப்பீடு ஏற்படுத்தியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சிபிஐ வழக்கை அடிப்படையாக வைத்து, கடன் வாங்கிய பணத்தை மத்திய அரசு அனுமதியின்றி சட்டவிரோத பண பரிமாற்றம் செய்துள்ளதாகவும் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை மேற்கு தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், அமைந்தகரை, கோடம்பாக்கம் உள்ளிட்ட 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.