கோலாகலமாக தொடங்கிய உலகக்கோப்பை கால்பந்து தொடர்…!

உலகக்கோப்பை கால்பந்து தொடரானது மெக்சிகோவில் கோலாகலமாக தொடங்கியது.

ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை என்பது ஃபிஃபா உறுப்புச் சங்கங்களின் தேசிய அணிகளுக்கு இடையே நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சர்வதேச ஆண்கள் கால்பந்து உலகக் கோப்பை தொடராகும். இது உலகில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு தொடரா

2026 ஆம் ஆண்டு ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை தொடரான ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறுகிறது. அமெரிக்காவில் 11 நகரங்கள், மெக்சிகோவில் 3 நகரங்கள் மற்றும் கனடாவில் 2 நகரங்கள் என மொத்தம் 16 நகரங்களில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் 12 பிரிவுகளில் தலா 4 அணிகள் வீதம் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த நிலையில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடக்க விழாவுடன் மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ சிட்டியில் வியாழகிழமை நாள்ளிரவு (ஜுன் 11) கோலாகலமாக தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.