தென்காசி அருகே கணவர் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை!

தென்காசியில் கணவர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த கல்லூரணி கிராமத்தை சேர்ந்த குமுதா என்பவருக்கும் ராயப்பநாடானூர்…

தென்காசியில் கணவர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த கல்லூரணி கிராமத்தை சேர்ந்த
குமுதா என்பவருக்கும் ராயப்பநாடானூர் கிராமத்தைச் சேர்ந்த சுதர்சனுக்கும் 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.சுதர்சன் சென்னையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் சுதர்சன் திருமணமாகி 25 நாட்கள் மட்டுமே குமுதாவுடன் குடும்பம் நடத்திவிட்டு சென்னைக்கு சென்று வீடு பார்த்துவிட்டு அழைத்துச் செல்வதாக கூறிச் சென்றுள்ளார். இருப்பினும் குமுதா தொலைபேசி வாயிலாக அழைத்த போது அதனை சுதர்சன் நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது ஒரு கட்டத்தில் சுதர்சன் குமுதாவிடம் உன்னை எனக்கு பிடிக்கவில்லை நான் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறேன் என
கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குமுதாவின் குடும்பத்தினர் சுதர்சனின்
குடும்பத்தினரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் அளிக்கவில்லை.

மீண்டும் தன்னை அழைத்துச் செல்வார் என்ற ஏக்கத்தில் தனது தாய் வீடான கல்லூரணியில் இருந்த குமுதா சுதர்சன் ஊருக்கு வந்திருந்ததை அறிந்து தனது
உறவினர்களுடன் சேர்ந்து சுதர்சனின் வீட்டு வாயிலில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை
செய்து கொண்டுள்ளார். சம்பவம் அறிந்த பாவூர்சத்திரம் காவல் துறையினர் உடலை
கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர் மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம்
முடிந்து 6 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதிகளில்
பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.