முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு போராடிய பொதுமக்கள்

விருத்தாசலம் நகராட்சியில் நீர் நிலைகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகள் அகற்றும் பணியை கண்டித்து பொதுமக்கள் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் கடலூர் இந்திரா நகரில் உள்ள 4அரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 66 கடைகள்,வீடுகள் மற்றும் ஆலடி ரோட்டில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 95 கடைகள் ,வீடுகளை அகற்றுவதற்காக விருத்தாசலம் வருவாய்துறையினர் அளவீடு செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடந்தது. விருத்தாசலம் தாசில்தார் தனபதி முன்னிலையில்,விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்ட் அங்கித்ஜெயின் தலைமையில் போலீசார் பாதுகாப்புடன், கடலூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. விருத்தாசலம் கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் போக்குவரத்தை மாற்று வழியில் திருப்பிவிட்டனர்.

கட்டிடங்களின் முன் பகுதி மற்றும் தரைப் பகுதிகள் சேதப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தாசில்தார் தலைமையிலான குழுவினர் இந்திரா நகர் பகுதியில் மக்களை சந்தித்து வீட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் விரைவில் வீடுகள் இடித்து அகற்றப்படும் எனவும் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென விருதாச்சலம் கடலூர் சாலையில் ஒன்று கூடி மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்து தங்கள் மீது ஊற்றிக்கொண்டு வருவாய்துறை மற்றும் போலீசாரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி எறிந்தனர். மேலும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் போலீசாரிடம் பேசிய பொதுமக்கள் எங்களுக்கு மாற்று இடம் இல்லை நாங்கள் எங்கே செல்வது எனக்கூறி கதரி அழுதனர். தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொது மக்களை சமாதானப்படுத்தினார்கள். இதனால் சிறிது நேரம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

11 மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆலோசனை!

Halley Karthik

நிலத் தகராறு தொடர்பாக புகார்-ஓபிஎஸ் சகோதரர் மீது வழக்குப் பதிவு

G SaravanaKumar

”விதிகளின்படியே கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகிறது”

Janani