கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில், காவல்துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் தமிழக காவல் துறையினர் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முகாமில் சேலம், நாமக்கல், தர்மபுரி,கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர்.
சுமார் 80 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த இந்த முகாமில், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளால், அவரவர் படிப்புக்கு ஏற்ற துறைகளில் நேர்காணல் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் சிலருக்கு உடனடியாக வேலை உத்ரவாதமும், சிலருக்கு பின்னர் தெரிவிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தாக நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்த தமிழக காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட இளைஞர்கள், வேலை தேடிச் செல்லும் இடங்களில் காலம் கடத்தி வந்த நிலையில், ஒரே இடத்தில் இந்த முகாம் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் இதில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
* சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: