ஆத்தாடி… எலான் மஸ்க் இந்தாண்டு செலுத்திய வரி ரூ.83 ஆயிரம் கோடி!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், தான் இந்தாண்டு செலுத்தும் வரி விவரத்தை தெரிவித்துள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான்…

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், தான் இந்தாண்டு செலுத்தும் வரி விவரத்தை தெரிவித்துள்ளார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இவரை, அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் மாத இதழ், இந்த ஆண்டுக்கான சிறந்த நபராக சமீபத்தில் தேர்வு செய்திருந்தது.

இந்நிலையில் இவர் சரியாக வருமான வரி கட்டுவதில்லை என்றும் பணக்காரராக இருந்தால் போதுமா? என்றும் சமூக வலைதளங்களில் சரமாரியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பல நெட்டிசன்ஸ் கடுமையாக அவரை விமர்சித்திருந்தனர். சிலர் அவரை ஆதரித்தும் பதிவிட்டிருந்தனர்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடும் விவாதமானதை அடுத்து, எலான் மஸ்க் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இந்த வருடம் 11 மில்லியன் டாலருக்கு அதிகமாக, வரி செலுத்தி இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூ. 83,624 கோடி.

இது உண்மையாக இருந்தால், அமெரிக்காவில் ஒருவர் செலுத்திய சாதனை வரியாக இது இருக்கும் என்கிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.