அந்தியூர் வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை, உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனசரகத்திற்கு உட்பட்ட அத்தாணி வனப்பகுதியில் வழக்கம்போல வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பெண் யானை ஒன்று இறந்து கிடைப்பதை கண்டனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவுப்படி, கால்நடை மருத்துவரை கொண்டு யானையின் சடலம் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், இறந்த பெண் யானையின் வயது 20 என்றும், உடல்நலக்குறைவால் இறந்திருப்பதும் தெரிய வந்தது. யானைகள் உயிரிழப்பதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







