ஒரு குட்டி யானை, அதன் பாகனைக் கட்டியணைத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நேசத்திற்கு மொழியோ, வார்த்தைகளோ தேவையில்லை என்பதை ஒரு குட்டி யானை நிரூபித்துள்ளது. வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் சுசந்தா நடந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குட்டியாணை அதன் பாகனைச் செல்லமாகக் கட்டியணைக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் பாகன் மும்முரமாகக் குப்பைகளைச் சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்.
அப்போது அவரை குட்டி யானை செல்லமாகக் கட்டியணைக்கிறது. தன்னை இவ்வளவு நாள் பராமரித்த பாகனாக்கு அன்பை இப்படி வெளிப்படுத்தியிருக்கிறது அந்தக் குட்டியாணை. இந்த புகைப்படத்தை ஆனந்த ஷின்ட் என்பவர் எடுத்துள்ளார். இப்புகைப்படத்திற்கு ’ என்னால் நீயும் உன்னால் நானும்’ என்ற வாசகத்துடன் சுசந்தா நடந்தா இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை நெட்டீசன்கள் வைராக்கி வருகின்றனர்







