முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவிப்பு!

கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவித்துள்ளார்.

கர்நாடாகாவில் கடந்த 2023 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது, சித்தராமையா முதலமைச்சராகவும், டிகே சிவகுமார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். மேலும் இரு​வருக்​கும் தலா இரண்​டரை ஆண்டு​கள் முதலமைச்சர் பதவி வழங்க காங்​கிரஸ் மேலிடத் தலைவர்கள் சம்​மதம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சித்தராமையா முதல்மந்திரியாக பொறுப்​பேற்று 3 ஆண்​டு​கள் ஆன நிலை​யில், டி.கே.சிவகுமாருக்கு அந்த பதவியை வழங்க வேண்​டும் என அவரது ஆதர​வாளர்​கள் போர்க்​கொடி தூக்​கினர். இதையடுத்து டெல்​லி​யில் நேற்று முன்​தினம் மாலை காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தலை​மை​யில் முதல்வர் மாற்ற விவ​காரம் தொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி, சித்​த​ராமை​யா, டி.கே.சிவகு​மார் உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக டிகே சிவக்குமார் நாளை பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.