கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, நேரக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
பிரதமர் மோடி தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்றைய ஆலோசனை கூட்டத்தின்போது ஆக்சிஜன் தடையின்றி கிடைக்க மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை பிரதமர் அதிகாரிகள் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவல், ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.







